சற்று முன் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ். கொக்குவில் – பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த வீட்டின் கதவையும் கோடரியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் கூறியுள்ளனர்.