இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், ஹோலி கொண்டாட்டத்தின் போது பாடல் ஒலிபரப்பியதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது நீராஜ் ஜாதவ் என்ற 16 வயது இளைஞர், தனது நண்பர்களுடன் பக்கத்து கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ஹோலி பண்டிகைக்காக பாடல்கள் ஒலிக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் வண்ணப்பொடிகளை தூவி, பாடலுக்கு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நீராஜ் ஜாதவ் பாடலை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர், நீராஜ் மற்றும் அவரது நண்பர்களை மோசமாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த நீராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அங்கு பெரிய போராட்டம் உருவாகியுள்ளது.
நீராஜின் உடலை வாங்க மறுத்த அவரது பெற்றொர், தங்களது கிராமத்து மக்களுடன் சேர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் 3 பேர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். மேலும், கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.