அடுத்த இலக்கு குறித்து மனம் திறந்த மகிந்த!

பொதுத் தேர்தலே எமது அடுத்த இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு அளித்த சமிக்ஞையை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடையக் கூடும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவளித்து வருகின்றனர் என மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.