உல்லாசமாக வாழ்வதற்கு மோசமான காரியத்தில் ஈடுபட்ட குடும்பப்பெண்!

இள வயது ஆண்களுடன் உல்லாசமாக வாழ்வதற்காக கொள்ளையில் ஈடுபட்ட குடும்பப் பெண் ஒருவரை அதுருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீட்டுப் பணிப் பெண்ணாக வீடுகளில் கடமையாற்றுவது போன்று வீடுகளுக்குச் சென்று அங்கிருந்து பணம் நகைகளை கொள்ளையிட்டு அவற்றைக் கொண்டு குறித்த பெண் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

வெலிகட, ராஜகிரிய, அரனோதய மாவத்தையைச் சேர்ந்த 32 வயதான விவாகமான பெண் ஒருவரே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தப் பெண், சட்டவிரோதமான முறையில் இரண்டு கணவர்களுடன் வாழ்ந்து வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கொள்ளையின் ஊடாக கிடைக்கும் பணத்தைக் கொண்டு இந்தப் பெண் சூதாட்டத்தில் ஈடுபடுவதுடன், மேலும் இள வயது ஆண்களுடன் உல்லாசமாக கழிப்பதற்கு பணத்தை செலவிட்டுள்ளார்.

கொட்டாவ, தலங்கம, பொரலஸ்கமுவ, மிரிஹான, கட்டுநாயக்க போன்ற பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டாகவே பணம் பொருட்களை இந்தப் பெண் கொள்ளையிட்டு வந்துள்ளார்.

இந்தப் பெண் பல ஆண்டுகளாக கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.