பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் யாழ். இ.போ.ச பேருந்து நிலையத்தின் ஊழியர்கள்!

யாழ். இ.போ.ச பேருந்து நிலையத்தின் ஊழியர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ் – கொழும்பு பேருந்துக்கள் தரித்து நிற்கும் பகுதிகளிலேயே இவ்வாறான இடையூறுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள் போன்றோரை தமது பேருந்தில் ஏற்றும்போது கையில் சிகரெட்டுடன் புகைப்பிடித்துக் கொண்டும் தகாத வார்த்தைகளை பிரயோகித்துக் கொண்டும் நிற்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் பொது இடங்களில் புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும், இ.போ.ச ஊழியர்களே இவ்வாறு சட்டத்தை மீறுவதென்பது கவலைக்குரிய விடயமாகும் இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.