காதலி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரஜினி.. ‘காலா’ கதை இதுவா?

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘காலா’ திரைப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

‘காலா’ படத்தில் ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

kaala-rajini-tatto65-1519998929 காதலி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரஜினி.. 'காலா' கதை இதுவா? காதலி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரஜினி.. 'காலா' கதை இதுவா? kaala rajini tatto65 1519998929

 

‘காலா’ டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், ரஜினியின் ஸ்டைலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. ‘காலா’ டீசரில் வந்த காட்சிகளில் ரஜினி தனது கையில் காதலியின் பெயரை பச்சை குத்தியுள்ளார். இதை சமூக வலைதளங்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனுஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘காலா’ டீசர் நேற்று இரவு லீக் ஆனதைத் தொடர்ந்து உடனடியாக டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் தனுஷ்.

காலா டீசர், வெளியானது முதல் யூ-ட்யூபில் டாப் ட்ரெண்டிங்கிலேயே இருக்கிறது. இப்படத்தில் ரஜினி பேசிய ஒவ்வொரு வசனமும் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டீசரில் வரும் ஒரு காட்சியில் ரஜினி ஷோபாவில் அமர்ந்து கொண்டு கருப்பு நிறம் மற்றும் தனது பகுதியில் வசிப்பவர்களைப் பற்றி பேசுவார். அப்போது, அவரது வலது கையில், பச்சை குத்தியிருக்கும் பெயர் ஓரளவு தெளிவாக தெரியும்.

சரீனா என்னும் பெயரைத் தன்னுடைய கையில் பச்சையாக குத்தியிருப்பார் கரிகாலன் ரஜினி. சரீனா என்பது ‘காலா’ படத்தில் ஹூமா குரேஷியின் கதாபாத்திரத்தின் பெயர். அதன்படி, சரீனா ரஜினியின் முன்னாள் காதலியாக வருகிறார் எனத் தெரிகிறது.

eswari-rao765-1519999068 காதலி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரஜினி.. 'காலா' கதை இதுவா? காதலி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரஜினி.. 'காலா' கதை இதுவா? eswari rao765 1519999068

அதன் பிறகு ஈஸ்வரி ராவ்வை திருமணம் செய்து கொள்கிறார். ரஜினி – ஈஸ்வரி ராவ் தம்பதியினருக்கு ‘வத்திக்குச்சி’ திலீபன் மகனாக நடித்திருப்பார் எனத் தெரிகிறது. ரஜினியின் முன்னாள் காதலும் படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16-1494933246-4-1519999150 காதலி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரஜினி.. 'காலா' கதை இதுவா? காதலி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரஜினி.. 'காலா' கதை இதுவா? 16 1494933246 4 1519999150இந்த டீசரில் ஹூமா குரேஷி திரும்பிப் பார்க்கும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. ரஜினி மற்றும் ஈஸ்வரி ராவ் காரில் அமர்ந்தபடி விழா ஒன்றை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது அடுத்த கட்-டில் திரும்பவும் ஹூமா குரேஷி வருகிறார்.