தற்போது பனி அதிகமாக பொழியும் என்பதால். இந்த பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.
அதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.
வைத்தியம்#1
ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்
வைத்தியம் #2
ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
வைத்தியம் #3
கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.
வைத்தியம் #4
மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வைத்தியம் #5
வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
வைத்தியம் #6
வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வைத்தியம் #7
இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.
வைத்தியம் #8
கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்
அனைத்து மருத்துவ குறிப்புகளும் அறிவுநோக்கத்திற்காக மட்டுமே.
ஏதாவது நோய்க்கு நீங்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், உங்கள் வைத்தியரின் ஆலோசனைப் படிமருந்துகளைத் தொடர நாங்கள் கடுமையாக ஆலோசனைசெய்கிறோம். உங்கள் வைத்தியரின் அறிவுரை இல்லாமல்மருந்துகளை நிறுத்தவோ அல்லது மருந்தின் அளவைமாற்றவோ நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை.இந்த வீடியோவிலிருந்து வரும் உதவிக்குறிப்புகளைமுயற்சி செய்வதில், உங்கள் உடலில் நேரடியாகவோமறைமுகமாகவோ ஏற்படும் எந்தவொரு பக்கவிளைவுகளுக்கும், பண இழப்புகளுக்கும் நாங்கள்பொறுப்பு அல்ல. ஒரு வைத்தியரின் ஆலோசனை இல்லாமல்,ஒரு உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயைகண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ இந்த தகவலைநீங்கள் பயன்படுத்தக்கூடாது. ஏதாவது ஆலோசனைக்குஉங்கள் மருத்துவரை அணுகவும்