உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச வேண்டுமா? எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? கவலையை விடுங்கள்.
இக்கட்டுரையில் உங்களைத் தேடி அதிர்ஷ்டம் வருவதற்கு செய்ய வேண்டியவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெளியே செல்லும் போது, உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச உதவும் சில அதிர்ஷ்ட பொருட்களை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால், நினைத்த காரியம் கைக்கூடும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.அதிர்ஷ்ட சின்னங்கள்
அதிர்ஷ்ட சின்னங்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவில் உள்ளது. அதில் நட்சத்திரம், ஸ்வஸ்திகா சின்னம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை பாக்கெட்டில் எப்போதும் வைத்திருந்தால், அது நேர்மறை ஆற்றல்களை ஈர்த்து, வாழ்வை சிறப்பாக்கும்.
கொல்லிக் கண்சிறிதாக இருக்கும் கொல்லிக் கண்ணை, ஒருவர் தங்களது பாக்கெட்டில் வைத்துக் கொண்டால், அது ஒருவரை நோக்கி துரதிர்ஷ்டம் மற்றும் எதிர்மறை சக்திகளை அண்டவிடாமல் தடுக்கும். அரச மர இலை அரச மரத்தின் இலைகளை, வேலைத்தேடி அலைபவர்கள் தங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால், அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வந்து, சீக்கிரம் வேலைக் கிடைக்கும்.
ஹத ஜோடி என்பது ஒரு செடியின் வேர். இது மனித கைகள் இணைந்தவாறு இருக்கும். இந்த வேரை ஒருவர் தங்களது பாக்கெட்டில் வைத்துக் கொண்டால், அவர்கள் அமைதியானவர்களாக மற்றும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பார்கள்.
மயில் இறகுமயில் இறகை மஞ்சள் அல்லது சிவப்பு நிற துணியால் சுற்றி, எப்போதும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால், அது உங்களைத் தேடி அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.
வெள்ளை கற்கள்மன அழுத்தம் அல்லது மன பதற்றத்தால் இருப்பவர்கள், எப்போதும் தங்களது பாக்கெட்டில் வைத்துக் கொண்டால், மனம் எப்போதும் ரிலாக்ஸாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.
குதிரைலாடம்
சிலரது வீட்டின் முன் குதிரைலாடத்தை தொங்கவிட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். ஏனெனில் இது எதிர்மறை ஆற்றல் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கும். அதுவே சிறிய வடிவில் இருக்கும் குதிரைலாடத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால், எதிர்மறை ஆற்றல் நெருங்குவது தடுக்கப்படும்.