இறந்த மனைவியை எரித்த கணவன்: தெருவில் உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் இறந்ததாக கருதப்பட்டு மனைவியை எரித்த நிலையில் அவர் தற்போது உயிருடன் வந்திருப்பது அவர் உட்பட உறவினர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இருக்கும் திருபுவனம் தோப்பு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(45). இவர் ஆஷா(42) என்ற பெண்ணை கடந்த 24-ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு விக்னேஷ்வரன்(22) என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 13 வருடங்களுக்கு முன் ஆஷாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதால், அவ்ரை ராமச்சந்திரன் விவாகரத்து செய்துள்ளார்.

இதையடுத்து ஆஷாவும் யாரோட ஆதரவின்றி முற்றிலும் மனநிலை பாதிப்படைந்து அப்பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்த போது கடந்த 26-ஆம் திகதி திருப்புவனம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெண் ஒருவர் மயங்கி கிழே விழுந்துள்ளார்.

இதனால் அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது

ராமச்சந்திரனுக்கு போன் செய்து உங்கள் மனைவி ஆஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். வந்து உடலை பெற்று செல்லுங்கள் கூறியுள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது ஆஷாவின் முகம் அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. அவரின் 62 என குறிப்பிட்டிருந்தது.

சந்தேகமடைந்த ராமச்சந்திரன் பொலிசாரிடம் கேட்ட போது, வயது 42-க்கு பதிலாக 62 என்று தவறாக வந்துவிட்டது. உங்கள் மனைவி தான் இவர் என்று உடலை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் ராமச்சந்திரன் உடலை பெற்று உறவினர்கள் உதவியுடன் அங்கிருக்கும் சுடுகாட்டில் முறைப்படி சடங்குகள் செய்து எரித்துள்ளார்.

இறந்து எரிக்கப்பட்ட ஆஷா கடந்த 28-ஆம் திகதி அதே பகுதியில் இருக்கும் தெருவில் எப்போதும் போல் சுற்றித் திரிந்துள்ளார். இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் உடனடியாக ஆஷாவை சென்று பார்த்துள்ளார்.

அவர் அஷா தான் என்பதை உறுதி செய்தார். இதற்கு முக்கிய காரணம் பொலிசார் சரி வர விசாரணை மேற்கொள்ளாமல், சிகிச்சை பலனின்றி இறந்த யாரோ ஒரு பெண்ணின் உடலை தனது மனைவியின் உடல் என்று கூறி அவரிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

மேலும் இறந்த பெண் யார்? இறந்ததாக கூறப்பட்ட ஆஷா எப்படி உயிருடன் வந்தார்? என்று அப்பகுதி மக்கள் அவரை ஆச்சரியமாக பார்ப்பதுடன் சற்று அதிர்ச்சியுமடைந்துள்ளனர்.