மந்திரவாதி பேச்சை கேட்டு கணவனை கொன்ற மனைவி!

இந்தியாவில் குடிகார கணவரின் தொல்லையால் மந்திரவாதி பேச்சை கேட்டு அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் மூர்த்தி (54). இவர் மனைவி ரமா (44).

மூர்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் மனைவியுடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

இதோடு அவர்கள் குடும்பத்துக்கு 12 லட்சம் வரை கடன் இருந்துள்ளது.

ரமா எவ்வளவு சொல்லியும் குடிப்பழக்கத்தை மூர்த்தி கைவிடவில்லை. இந்நிலையில் ஷயாம் சிங் என்ற மந்திரவாதியை ரமா சந்தித்துள்ளார்.

ஷயாம், ரமாவிடம் விஷத்தை கொடுத்து மூர்த்தியை கொலை செய்ய சொல்ல அவர் சொல்படியே ரமா மூர்த்திக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து மூர்த்தி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மூர்த்தியின் சகோதரர் சிவ சர்மா பொலிசில் புகார் அளித்த நிலையில் ரமாவையும், ஷயாமையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.