தொட்டாலே போதும் சுயநினைவு இல்லாமல் ஆக்ககூடிய விசித்திர செடி!

குன்னூர் பகுதியில் சாலை ஓரமாக வளர்ந்திருந்த செடியை தொட்டவர்கள் கை உணர்வில்லாமல் ஆகியதையடுத்து அந்த செடியை அப்புறபடுத்துமாறு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குன்னூர் மவுண்ட் பிளன்ட் பகுதியில் சாலை ஒரமாக விசித்திர செடி ஒன்று வளர்ந்துள்ளது. இதை அப்பகுதி வழியாக சென்ற மாணவர்கள் செடியின் இலைகளை பியித்து விளையாடியதாக தெரிகிறது.

இந்நிலையில், செடியை தொட்ட கையானது சிறிது நேரத்திலேயே உணர்வில்லாமல் மறத்து போயுள்ளது.

இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மூலிகை ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்த பின்னர், அந்த விசித்திர செடியை ஆராய்ந்ததில். அந்த செடியைப் பற்றி திடுக்கிடும் தகவல்களை வெளிகியுள்ளன.

 

அதாவது சாலையோரம் வளர்ந்துள்ளது அர்த்திக்கா எனும் தாவர இனத்தைச் சேர்ந்த விஷச்செடி என்றும், இந்த செடியை தொட்டால் 4 மணி நேரத்துக்கு எந்த வித உணர்ச்சியும் இருக்காது என்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இந்த விஷச்செடியின் மீது விழுந்தாலோ அல்லது மாணவர்கள் உட்கார்ந்து விளையாடினாலோ அவர்களுக்கு சுயநினைவு என்பதே இல்லாமல் போய் விடும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த விஷச்செடிகளை அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.