இலங்கை அரசியலில் தமது குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது தொடர்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிரு்ப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக 2020 அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தக் கலந்துரையாடலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள பங்கேற்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.