கனடாவில் அண்ணன், தங்கை இருவரும் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தொடர்பான புகைப்படங்கள் பார்க்கும் போது கண்கலங்க வைக்கிறது.கனடாவின் Quebec பகுதியில் உள்ள Aylmer பகுதியைச் சேர்ந்தவர் Liliane Hajjar. இவருக்கு Jason என்ற கணவரும் Jacob- Liam என இரண்டு மகன்களும் Sophia என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் Liliane Hajjar, எனது மகன் மற்றும் மகள் புற்றுநோய் காரணமாக உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்ட புகைப்படம் என்று கூறி சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.இதைக் கண்ட இணையவாசிகள் மிகவும் உருக்கமான பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி இருவரும் ஒரே மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிலும் குறிப்பாக அந்த மருத்துவமனையில் எங்கள் குழந்தைகளின் பெயர்கள் குறிப்பிட்டு, அதில் இரண்டு பேருக்கு மேல் அறைக்கு உள்ளே செல்லக் கூடாது. மாலை 3 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி என்று எழுதி வைத்திருந்ததை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாகவும் கூறி, அது தொடர்பான புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார்.இந்நிலையில், இது குறித்து அவர் கூறும் போது, என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்து பார்க்கவே இல்லை. என்னுடைய இரண்டு குழந்தைகளும் புற்று நோய் காரணமாக உயிருக்கு போராடி வருகின்றனர்.Jacob-க்கு 5 வயது இருக்கும் போது தொடர்ந்து உடல் நிலை சரியில்லாமல் போனது, வாந்தி எடுத்த படியே இருந்தான்.
இதனால்,உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவனுக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இளைய மகனான Liam-க்கு பரிசோதனை செய்த போது அவனுக்கு இல்லை. ஆனால் சோபியாவுக்கு பரிசோதனை செய்த போது புற்று நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது.புற்றுநோயால் பாதிப்புக்குள்ளான Jacob-ற்கு ஒரு புறம் பார்வை மற்றும் ஒரு புறம் காதும் கேட்காமல் போனது, சில வாரங்களுக்கு முன்பு அவனது கிட்னியும் பாதிக்கப்பட்டது.இதனால் அவன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான், இதே வேளை Sophia-விற்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், இருந்த போதும் அவள் அதிக காலம் வாழ்ப்போவதில்லை என்பதும் புரிகிறது.
இருப்பினும், ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்துவிடாதா என்ற நம்பிக்கையில் இருப்பதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். இளையமகன் Liam கூறுகையில், எனக்கு அண்ணன், தங்கை என இருவர் இருந்தும் யாரும் இல்லாதது போல் உணர்கிறேன்.இவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்ப நண்பர் ஒருவர் நிதி திரட்டி வருகிறார். தற்போது வரை 20,000 பவுண்ட் நிதி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.