வாகன சோதனையின் போது பொலிஸ் அதிகாரி செய்த இரக்கமற்ற செயலால் தனது குழந்தையுடன் 25 கி.மீ தம்பதிகள் நடந்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே உள்ள தேவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.
தனது குழந்தை மற்றும் மனைவியியுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று வந்துள்ளார். அப்பொழுது 6 மணியளவில் காவலர்கள் வழிமறித்து அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.
தனது ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகத்தை காண்பித்தும், ரசீதை கொடுத்து ரூ.2500 கட்டிவிட்டு செல்லுமாறு சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் வற்புறுத்தியுள்ளார்.
ரசீதில் பணம் எவ்வளவு என்பது குறிப்பிடாமல் பணத்தைக் கேட்டது மட்டுமின்றி தன்னிடம் பணம் இல்லை நீதிமன்றத்தில் கட்டிவிடுகிறேன் எனக் கூறியும் காதில் வாங்கிக் கொள்ளவில்லையாம்.
அதன் பின்பு இரவு 10 மணி வரை மனைவி, குழந்தையுடன் கெஞ்சிப் பார்த்தும் வாகனத்தை தர மறுத்ததால் 25 கி.மீ நடந்தே வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
கடந்த 1ம் திகதி நடந்த இச்சம்பவத்தினை தற்போது மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில், காவலர்கள் வண்டியை பிடுங்கிவைத்துக் கொண்டதால், நான் கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, எனது வண்டியை திருப்பி ஒப்படைக்க காவலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், எங்களை மன உலைச்சலுக்கு உள்ளாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் செலுத்த வேண்டிய அபராத தொகை எவ்வளவு என்று தெரிவித்தால், அந்தத் தொகையை நான் நீதிமன்றத்தில் செலுத்திவிடுகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.