முல்லைத்தீவு கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்றுப் பிற்பகல் வழிபாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.இந்த வழிபாடு தொடர்பில் மக்கள் கருத்து வெளியிடும் போது; அண்மைக்காலங்களில் முல்லைத்தீவு பெருங்கடலில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களினால் மீனவர்கள் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.கடலில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பல மாற்றங்களினால் மீனவர்களின் தொழில் பாதிப்படைந்திருந்தது.சீரற்ற கடல் நீரோட்டத்துடன் திடீரென கடல் கறுப்பு நிறமாக மாறியதும் அதிக குளிர்ச்சியுடனும் காணப்பட்டதும் பின்னர் கடற்பாசி அதிகரித்துள்ளமை போன்றவை இடம்பெற்று வருகின்றன.இதன் காரணமாக மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியதுடன், உள்ளூர் மக்களுக்கு கடலுணவுகள் கிடைக்கவில்லை.இந்த நிலையில் கடலின் இயற்கைநிலை சீராகவேண்டும் என்றும், மீனவர்களின் தொழில் மேம்படவேண்டும் என்றும் இந்த சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.