ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை மீண்டும் அவசர அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வை கருத்தில்கொண்டு இன்று மாலை 7 மணியளவில் இந்த அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, கண்டியில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.