யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமானுஷ்யம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும், தங்களுடன் இணைந்து வர்த்தகம் செய்பவர்களும் எந்த இலாபமும் பெறுவதில்லை எனவும் பாரிய நட்டம் அடைந்துள்ளதாகவும் யாழ். சிறிய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக யாழ். மக்கள் ஒருவித அச்ச உணர்வில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வர்த்தக நிலையத்தில் வர்த்தகம் செய்தவர்களில் சிலர் மர்ம நோய் காரணமாக கடந்த 4 மாதங்களில் உயிரிழந்தனர். இதனால் இவர்களின் வீடுகளுக்கு தினமும் அமானுஷ்ய சக்தி வருவதாகவும், அமானுஷ்ய சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வர்த்தக நிலையத்தில் ஆரம்பமான அமானுஷ்ய கதைகள் தற்போது யாழ்ப்பாணத்தின் சிறு பிரதேசம் வரை பரவியுள்ளது.இந்த நிலைமைக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இவ்வாறான அமானுஷ்ய சம்பங்கள் இடம்பெறுவதாக தெரிய வருகிறது.கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கிரிஸ் பேய் பயம் போன்று தற்போது ஏற்பட்டுள்ள பயம் குறித்தும் மக்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.