பேஸ்புக்கிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட explore feed!!

முகநூல் நிறுவனத்தால் இலங்கை உட்பட 6 நாடுகளில் பரீட்சித்து பார்க்கப்பட்ட முகநூல் explore feed   நிறுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய நடவடிக்கை தொடர்பில் முகநூல் பயனாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.6 நாடுகளின் முகநூல் பயனாளர்களுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட பதிவுகள் மாத்திரமே பேஸ்புக் பக்கங்களில் காட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகளுக்கு explore feed பகுதிக்குச் செல்ல வேண்டும் என்ற வகையில் முகநூல் மாற்றமடைந்தது.

எப்படியிருப்பினும் இந்த நடவடிக்கையை முகநூல் பயனாளர்கள் விரும்பவில்லை. பரீட்சார்த்த நடவடிக்கை காரணமாக முகநூல் பக்கங்களுக்கான விருப்பங்கள் குறைவடைந்துள்ளதாகவும், அது இணையத்தளங்களுக்கு பாதிப்பைஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் இன்று முதல் முகநூலில் இருந்து explore feed நீக்கப்பட்டுள்ளது.