200 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் நடந்த வித்தியாசமான திருமணம்!!

இந்தியாவின் மேற்கு மாநிலம் குஜராத் அகமதாபாத் நகரில் 200 முஸ்லிம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை), இஸ்லாமிய மத சடங்குகளின் முறைப்படி குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளது.இவ்விழாவை அஹமதாபாத் ஐமியா ஃபைசானுல் குர்ஆன் என்ற சமூக அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. வறுமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தெரிவு செய்து இந்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டது.இதேவேளை திருமணமான தம்பதியினருக்கு அத்தியாவசியப் பொருட்களான குளிர்சாதனப்பெட்டி, மின்விசிறி, சமயலறை உபகரணங்கள், பாத்திரங்கள் உட்பட வீட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.