கத்திகளை எடுத்துக்கொண்டு வாருங்கள்! வைரலாகும் இனவாத காணொளி!

கண்டி – தெல்தெனிய சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் சிங்கலே அமைப்பைச் சேர்ந்தவர் என பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்டி சம்பவம் தொடர்பில் குறித்த பிக்கு மற்றும் இளைஞர் ஒருவர் பேசிய காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அந்த காணொளிகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

“தெல்தெனியவில் சிங்கலே அமைப்பைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். நாளை உங்களையும் கொலை செய்ய முடியும் என்னையும் கொலை செய்ய முடியும்.

காவி உடை அணிந்துள்ள என்னுடைய பேச்சுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவும் கூடும். பிக்குகள் விகாரைகளில் இருந்து கொண்டு ஓதிக்கொண்டு தானம் கொடுத்துக்கொண்டு இருக்க முடியாது.

நாங்கள் தான் அவர்களை இங்கு அனுமதித்தோம். நாங்களே இடங்களையும் கொடுத்தோம். எமது பெண்களையும் அவர்களுக்கு கொடுத்தோம். அவர்கள் மூலம் பெற்றெடுத்த பிள்ளைகளைக் கொண்டே எம்மை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

ஆகவே பொறுத்தது போதும். தெல்தெனிய, அம்பாறை மட்டும் இல்லை இலங்கை முழுவதும் சிங்களவர்களுக்கு எதிராக சதி நடைபெறுகின்றது.

ஆகவே பொறுத்தது போதும். தற்போது உங்களுடைய வீடுகளில் உள்ள கத்தி விறகு வெட்டுவதற்காக அல்ல. அந்த கத்திகளை எடுத்துக்கொண்டு வெளியே வாருங்கள்.

துட்டகைமுனு மன்னன் போர் செய்த போது அவருக்கு உதவியது பௌத்த துறவிகளே. உண்பதற்கு உணவு தரும் சிங்களவர்களுக்காக வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் உண்ணும் உணவு செமிக்காது.

இன்று நாம் செய்யப்போகும் செயலை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இல்லை. அவருடைய அம்மாவே வந்தாலும் நிறுத்த முடியாது.

எம்மால் செய்ய முடிந்தது நன்மையோ தீமையோ அதை செய்தே தீருவோம். நிறுத்த முடியாது” என அந்த பிக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு இளைஞனும் இது குறித்து சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

“இந்த இடத்தில் ஒரு இடம் கூட சிங்களவரின் கடை இல்லை. இது திகன நகரம். இது முழுவதிலும் முஸ்லிம் கடைகளே இருக்கின்றன.

சிங்கள கடைகளுக்கு கொடுப்பதற்காக சில பத்திரிகைகளை அச்சிட்டு வந்தோம். முழு நகரையும் சுற்றி விட்டோம். ஆனால் ஒரு சிங்கள கடையைக்கூட காணவில்லை.

இந்த செயற்பாட்டை நாம் இப்போது ஆரம்பித்திருக்க கூடாது. பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும்.

இது மிகவும் கவலை தரும் விடயமாகும். இந்த நிலைக்கு வருவதற்கு காரணம் சிங்களவர்களே” என தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.