ஒருவருக்கு திடீர் பதவியோ, பணமோ கிடைத்தால் நாம் அனைவரும் இவன் மட்சகாரண்ட என்று கூறுவது உண்டு. அது உண்மைதான். அதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்தும் இந்த பதிவை படியுங்கள்…
அடிவயிறு
அடிவயிற்றில் மச்சம் இருந்தால் ராஜயோக அம்சம் கொண்டவர் என்று கூறுகின்றனர். தானாக உயர் பதவிகள் தேடிவருமாம்.
நடு நெற்றி
நடு நெற்றியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு புகழ், பதவி அந்தஸ்து தேடிவருமாம்.
வலது நெற்றி
வலது நெற்றியில் இருந்தால், தைரியமாகவும், கர்வமாகவும் இருப்பார்களாம்.
மூக்கு
மூக்கில் மச்சம் இருந்தால் பொறுமையானவர்களாக இருப்பார்களாம். அதுவே, நுனி மூக்கில் இருந்தால் திடீர் என்று அதிஸ்டம் வருமாம்.
இடது பக்கம் கன்னம்
கன்னத்தில் இடது பக்கம் இருந்தால் மற்றவர்களை எளிதில் வசீகர படுத்துபவர்கலாம். அதுவே, வலது பக்கத்தில் இருந்தால் சுறுசுறுப்பாக இருப்பார்களாம்.
நாக்கு
நாக்கில் மச்சம் இருந்தால் அவர் சொல்வது அப்படியே பலிக்குமாம். வயிற்றில் மச்சம் இருந்தால் நல்ல குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
வயிறு
வயிற்றில் தொப்புளுக்கு கீழ் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படும். அதுவே, தொப்புளின் பக்கத்தில் இருந்தால் அவர் ஆடம்பரமாக வாழ்வராம்.