மார்ச் மாதம்! இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்…

ஒவ்வொரு மாத்திலும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமே பல புதிய அதிர்ஷ்ட பலன்கள் இருக்கும். அதேபோல் இந்த மார்ச் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என்பதை படித்து தெரிந்துக் கொள்வோம் வாங்க…

மேஷம்

மேஷம் ராசியில் அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாகம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலைகள் குறையும். அனைத்து வகைகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

இவர்களுக்கு அஷ்டமத்து சனி இருப்பதால் எதிலும் சற்று கூடுதல் கவனம் தேவை. திடீர் செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டப்படி இல்லாமல் பயணங்களில் தடங்கள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.

அதிர்ஷ்ட கிழமைகள் – ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.

ரிஷபம்

ரிஷபம் ராசியில் கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2-ம் பாதம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமான பலன்களை பெறப்போகிறார்கள். பணவரத்து அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விடயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருட்களை கவனமாக பாதுக்காப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள் – புதன், வெள்ளி.

மிதுனம்

மிதுனம் ராசியில் மிருக சிரீஷம் 3, 4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

மிதுனம் ராசிக்காரர்கள் இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விடயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புத்தி சாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். உடல் சோர்வு உண்டாகும். ஆனால் மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். ஆனால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள் – ஞாயிறு, புதன், வியாழன்.

கடகம்

கடகம் ராசியில் புனர்பூசம்4-ம் பாகம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

கடகம் ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் எப்படியும் செய்து முடித்து விடுவார்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

திட்டமிடுதலில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தப்படி இருக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் வாக்கு, வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள் – திங்கள், புதன், வெள்ளி.

சிம்மம்

சிம்ம ராசியில் மகம், பூரம், உத்திரம் 1-ம் பாகம், ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

சிம்ம ராசிக்காரர்கள் அனைத்து வகையிலும் நன்மைகள் உண்டாகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சிறு சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடிப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் – ஞாயிறு, வியாழன்.

கன்னி

கன்னி ராசியில் உத்திரம் 2, 3, 4,-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதம் ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் எதிர்பார்த்த தகவல்கள் நல்லதாக வரும். விருப்பங்கள் கைகூடும். மற்றவர்களிடம் பேசும் போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது

பணவரத்து நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள் – புதன், வெள்ளி.

துலாம்

துலாம் ராசியில் சித்திரை 3, 4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதம் ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கச் செய்யும். மனமகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் – செவ்வாய், வெள்ளி.

விருச்சிகம்

விருச்சிகம் ராசியில் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

விருச்சிகம் ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடிப்பில் இருந்தாலும் மற்ற கிரகங்கள் அனுகூலமான பலன்களை அள்ளி தரும்.

வீடு, மனை, வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சனியின் சார சஞ்சாரத்தால் மனம் மகிழும் படியான விடயங்கள் நடக்கும்.

தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த நிலைகள் மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் – செவ்வாய், வெள்ளி.

தனுசு

தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

தனுசு ராசிக்காரர்கள் அவர்களின் பேச்சு இனிமையால் காரியங்கள் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஏழரை சனியின் முதல் காலகட்டத்தில் இருப்பதால், எதிலும் சற்று கவனம் தேவை.

தொழில் வியாபாரம் திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் – ஞாயிறு, வியாழன், வெள்ளி.

மகரம்

மகரம் ராசியில் உத்திராடம் 2, 3, 4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2-ம் பாதம் ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு அனைத்து வகையிலும் நல்லதே நடக்கும். எதிர்ப்புகள் விலகும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன்களை கிடைக்க பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் – ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.

கும்பம்

கும்பம் ராசியில் அவிட்டம் 3, 4-பாதம், சதயம், பூரட்டாதி1, 2, 3-ம் பாதம் ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை பெறுவதில் சிரமங்கள் இருக்காது. வீணாக மனதை உருத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும்.

எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் இழுபரியான நிலை காணப்படும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு, வியாழன்.

மீனம்

மீனம் ராசியில் பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் விலகும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. திட்டமிட்ட காரியங்களில் தடங்கல் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் உழைப்பிற்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் – புதன், வியாழன், வெள்ளி.