கண்டி திகன வன்முறை சம்பவத்தையடுத்து, எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தூதரக விவகார பணியகம் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை:
இனவாத அமைதியின்மை காரணமாக கண்டி நிர்வாக மாவட்டம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் அவசரகால நிலைமையையும் ஊரடங்கு சட்டத்தையும் இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
குறித்த நிலைமையானது மேலும் சில நாட்களுக்கு தொடரும் நிலைமைகள் உள்ளன.
இந்த நிலையில் உள்ளூர் ஊடகங்களின் உடனடி தகவல்களை அவதானிக்கவும்’ என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.