பேஸ்புக் கமெண்டுக்கு ரிப்ளை கொடுக்கவில்லை: இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்!

முகநூலில் தான் பத்விட்ட கமெண்டுக்கு ரிப்ளை கொடுக்காததால் இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் தலைநகர் பாட்னாவில் காஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் சோனு குமார். இவர் பேஸ்புக்கில் பெண் ஒருவருடன் நட்பாக இருந்துள்ளார். அந்த பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிடும் ஸ்டேட்டஸ்களுக்கு இவர் கமெண்டுகள் இட்டால் அந்தப் பெண் பதிலளித்து வந்துளார்.

இந்நிலையில், திடீரென்று அந்தப் பெண் இவர் கமெண்டுக்கு பதிலளிப்பதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோனு கட்ந்த திங்கட்கிழமை மாலை ஜிபிஓ ரவுண்டானா அருகே, அந்தப் பெண் தனது மாமாவுடன் நடந்து வரும் பொழுது மோட்டார் சைக்கிள் ஒன்றில் நண்பருடன் வந்து வழி மறுத்துள்ளார்.

இவரைப் பார்த்து நின்ற அந்தப் பெண்ணின் மீது சோனு ஆசிட்டை வீசியுள்ளார். தடுக்க முயன்ற அவரது மாமா மீதும் ஆசிட் தெளித்துள்ளது. இருவரின் அலறலைக் கேட்டு கூட்டம் கூடத் தூங்கியதும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளனர்.

பின்னர், இளம்பெண் மற்றும் அவரது மாமாவும் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தகவலறிந்த பாட்னா பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தலைமறைவாகிய சோனுவைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.