இந்தியாவில் பொலிஸ் பெண் அதிகாரியை ஆய்வாளரே கொன்று குளிர்சாதப் பெட்டியில் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மும்பையில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அஸ்வினி ஜெயகுமார் கோரெ-பிந்த்ரே(37) என்னும் பெண் கடந்த 2016, ஏப்ரல் 15-ஆம் திகதியன்று மாயமாகியுள்ளார்.
அது குறித்து மாயமான அதிகாரியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ராஜு கோரே என்பவரை திருமணம் செய்திருந்த அஸ்வினுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் அஸ்வினிக்கும் பொலிஸ் ஆய்வாளர் அபய் குருந்த்கர் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.
இந்த உறவு குறித்து ராஜுக்கு தெரிய வந்த நிலையில் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டு தனியே வசிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த நிலையில் தான் ஒரு வருடமாக தனியே வசித்து வந்த அஸ்வினி மாயமானார்.
இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், சிசிடிவி கெமரா காட்சிகள் உதவியுடன் அபய் என்ற ஒரு ஆய்வாளரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அஸ்வினியை கொலை செய்து தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் அபய் அடைத்து வைத்திருந்ததாக அவரது நண்பர் மகேஷ் என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மட்டுமின்றி அஸ்வினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியுள்ள அபய், அவரை கொலை செய்வதற்காக பவர் கட்டர் உபோகித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.