திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!! யாருக்கு?

மனித வாழ்க்கையில் மதம் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. ஒவ்வொரு மதமும் மக்களை நல்வழிப்படுத்துகின்றது.

இந்து மக்களின் அன்றாட வாழ்வில் ஒன்றிணைந்த ஜோதிடம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வேறுப்பட்ட பலன்களை கொடுக்கின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் ராசிகளின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மேஷம்

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். நாளின் பிற்பகுதியை உற்சாகமானதாகவும் பொழுதுபோக்கானதாகவும் ஆக்கிட ஏதாவது பிக்ஸ் பண்ணுங்கள். வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.

ரிஷபம்

சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள். ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். மாணவர்களுக்கு மிக நல்ல நாள். தேர்வில் மிக நன்றாக எழுதுவார்கள்.

அதனால் தலைக்கனம் ஏறிவிடாமல் கடின உழைப்புக்கு உற்சாகமாக அமைய வேண்டும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உங்கள் துணை இன்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

மிதுனம்

தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள்.

உறவினர்கள் உங்களுக்கு உதவிக் கரம் நீட்டத் தயாராக இருப்பார்கள். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். மகிழ்ச்சியுடன் பிசினஸை கலக்காதீர்கள். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம்.

கடகம்

உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும்.

பிரச்சினைகளை மறந்து குடும்பத்தினருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். ரொமாண்டிக்கான மூவ்களுக்கு இன்று பலன் இருக்காது. உங்கள் காதல் துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள்.

சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்களுக்கு உங்கள் துணைக்கும் இடையே அடுத்தவர் தலையிட்டால் அது உங்கள் துணையிடன் எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

சிம்மம்

நோயைப் பற்றி பேசுவதை தவிர்த்திடுங்கள். நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுங்கள். ஏனெனில் நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள்.

பெயரளவில் தெரிந்தவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. ஐ.டி. வேலை பார்ப்பவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு பெறுவார்கள்.

வெற்றி பெறுவதற்கு உங்கள் கவனத்தை செலுத்தி சளைக்காமல் உழைக்க வேண்டும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் அண்டை வீட்டார் உங்களை பற்றி உறவினர்களிடம் தவறாக கூறக்கூடும்.

கன்னி

நம்பிக்கையும் சக்தியும் இன்று அதிகமாக இருக்கும். ஊகங்கள் பேரழிவாக அமையும். எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும்.

நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எதிர்பாலினரை எளிதாக கவர்வீர்கள். நீங்கள் நினைத்த்து போல எதுவும் நடப்பதில்லை என உங்களுக்கு தோன்றலாம், அந்த நெகட்டிவ் மனப்பான்மையை நீக்கி பாசிடிவ் உணர்வுடன் இன்று செயல்படவும். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இன்று உங்கள் திருமண பந்தத்தின் இனிமயான நாள்.

துலாம்

வேலையிடத்தில் ஏற்படும் டென்சன் நோயை ஏற்படுத்தும். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் துணைவரிடம் ரகசிய தகவலை பகிர்ந்து கொள்ளுமுன் யோசியுங்கள். முடிந்தால் அதைத் தவிர்க்கப் பாருங்கள்.

அவர் வேறு யாரிடமாவது அதை சொல்லக் கூடும். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். உங்கள் வேலையில் தொய்வு ஏற்படுவதால் உங்கள் சீனியர் கண்டிப்புடன் இன்று நடந்து கொள்வார்.

சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உடல் ரீதியான நெருக்கம் உங்களுக்கு உங்கள் துணைக்கு இடையே இன்று சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

உங்கள் நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஷாப்பிங் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால் முக்கியமில்லாத பொருட்களுக்கு நீங்கள் செலவு செய்யாவிட்டால் துணைவரை அப்செட் செய்வீர்கள். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. சிலருக்கு தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.

இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

தனுசு

சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். இன்று தனிமையாக உணர்வீர்கள், தனியாக இருப்பீர்கள். தனிமைப்படுத்தப்பட்ட உணர்வே புத்திசாலித்தனமான முடிவை எடுக்க விடாமல் தடுக்கும்.

அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம். குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும்! ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். உங்கள் வேலையில் தொய்வு ஏற்படுவதால் உங்கள் சீனியர் கண்டிப்புடன் இன்று நடந்து கொள்வார்.

மகரம்

மாலை நேரம் பதற்றம் நிறைந்ததாக உணர்வுகளின் கலப்பாக இருக்கும். ஆனால் கவலைப்பட ஏதும் இல்லை – ஏனெனில் ஏமாற்றத்தைவிட மகிழ்ச்சி அதிக ஆனந்தம் தரும். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

வீட்டு விவகாரங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு வேலையை சரியாகச் செய்ய முடியாமல் பாதிக்கும். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். பிசினஸ் மீட்டிங்குகளில் அதிகம் பேசுபவராகவோ உணர்ச்சிவயப்படவோ செய்யாதீர்கள்.

உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் நற்பெயரை சீக்கிரம் கெடுத்துக் கொள்ளக் கூடும். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள். உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். இன்றைய நாள் சிக்கல்கள் நிறைந்த்து. உங்கள் திருமண வாழ்க்கையும் அதில் ஒன்றாகலாம்.

கும்பம்

நெகடிவ் சிந்தனைகள் மன நோயாக மாறுவதற்கு முன்பு அதை அழித்துவிட வேண்டும். முழுமையான மன நிறைவைத் தரும் நன்கொடை மற்றும் தர்ம செயல்களில் ஈடுபடுவதன் மூலம் இதில் இருந்து விடுபடலாம். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள்.

முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் பயனற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தி குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும்.

உங்கள் பாஸ் கவனிப்பதற்கு முன்பு, நிலுவையில் உள்ள வேலைகளை முடித்திடுங்கள். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.

மீனம்

இன்று நீங்கள் ரிலாக்ஸ் செய்து நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள்.

வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். அன்புக்குரியவருடன் வெளியில் ஷாப்பிங் செல்லும்போது ரொம்ப கோபமாக இருக்காதீர்கள்.

ஆபீசில் உங்கள் டீமில் அதிகம் வெறுப்பேற்றும் நபர் இன்று மிக இணக்கமாக உங்களிடம் நடந்து கொள்வார். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று உங்கள் திருமண வாழ்வின் கடினமான நாளாகும்.