மகளின் தோழியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தந்தை: பொலிசில் சரண்!

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நபர் ஒருவர் தமது மகளின் தோழியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு நிர்பந்தித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத் பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நேற்றைய தினம் ஐதராபாத் பொலிசாருக்கு தொலைபேசி வாயிலாக ஒரு புகார் வந்துள்ளது.

அதில், இளம்பெண் ஒருவர் தம்மை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு நிர்பந்திப்பதாகவும் தம்மை காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டு முறையிட்டுள்ளார்.

இந்த அழைப்பின் பேரில் விசாரணை மேற்கொண்ட பஞ்சரா ஹில்ஸ் பொலிசார், தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபரை கண்டுபிடித்து விசாரித்துள்ளனர்.

அதில், தமது தோழியின் தந்தை தம்மை தொடர்ந்து தொல்லைக்கு உட்படுத்தி வருவதாகவும், பாலியல் தொழிலுக்கு நிர்பந்திப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிந்த பொலிசார், தலைமறைவாகியுள்ள குறித்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். பொலிசாருக்கு புகார் அளித்த இளம்பெண்ணுக்கு 16 வயது எனவும், பாதுகாப்பு கருதி அவரது பெயர் மற்றும் விவரங்களை வெளியிட முடியாது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த இளம்பெண் அவரது பெற்றோரிடம் வசித்து வருவதாலும், அவரது எதிர்காலம் கருதி இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.