ஸ்ரீதேவி இல்லாமல் பிறந்தநாளை மகள் ஜான்வி எப்படி கொண்டாடினார் தெரியுமா?

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி துபாயில் மரணமடைந்தார். இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜான்வி கபூர், குஷிகபூர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.

துபாயில் ஸ்ரீதேவி மரணமடைந்த செய்தியைக் கேட்ட மூத்த மகள் ஜான்வி படப்பிடிப்பு தளத்திலே கதறி அழுததாக செய்திகள் வெளியாகின.

அதுமட்டுமின்றி இறுதி அஞ்சலியின் போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

ஆண்டு தோறும் தன்னுடைய பிறந்தநாளை ஜான்வி அம்மாவான ஸ்ரீதேவியுடன் தான் கொண்டாடி வருவார். ஆனால் தற்போது அவர் மரணமடைந்துவிட்டதால், இன்று தன்னுடைய பிறந்தநாளை ஜான்வி முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.

இன்று 21-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ஜான்வி. முதியோர் இல்லம் ஒன்றிற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அருகில் அவரது நண்பர்கள் மற்றும் முதியோர் இல்லத்தி உள்ள பெரியவர்கள் பிறந்தநாள் வாழ்த்து பாடி வாழ்த்தினர்.

அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.