தூங்கி எழும்போது ஏன் திடீரென உடலை அசைக்க முடியவில்லை..

நாம் தூங்கும்பொழுது பல வினோதமான சூழ்நிலைகளை பெரும்பாலும் உணர்வதுண்டு. இதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்துகொள்ள கொஞ்சம் முயற்சித்தாலே போதுமானது என்கின்றனர்.

நிறைய பேர் தூங்கிகொண்டிருக்கும்பொழுது…திடீரென எழுந்து விடுவதும் உண்டு. இருப்பினும் அவர்களால் அந்த சமயத்தில் எதுவும் செய்ய இயலாத ஒருவராகவும் காணப்படுவர்.

இங்கே நாம், இந்த நிலைக்கான காரணத்தை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே. ஆம், இதனை தான் ‘தூக்க முடக்கம்’ (ஸ்லிப் பாராலைஸிஸ்) என கூறுவார்கள்.

நன்றாக தூங்கிகொண்டிருக்கும் ஒருவர்…தூக்கம் கலையும் முன்னரே திடீரென அரைத்தூக்கத்தில் எழுந்திரிப்பதனாலே…இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டு அவர்களால் தன் உடலை அசைக்க முடியாத நிலை ஏற்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரியாக அப்படி என்ன தான் நடக்கிறது?

ஓர் அறிக்கையின் படி, மக்கள்தொகையில் 7.6% சதவிகிதம் பேர் இந்த ஸ்லீப் பாராலைஸிஸால் பாதிக்கப்படுகிறார்களாம். இவர்களுக்கு தூக்கம் பாதிக்கப்படுவதோடு, மன நிலை பிரச்சனைகளான பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்ககூடிய வாய்ப்பும் இருக்கிறது.

நம்முடைய மூளை வேலை செய்கிறது. ஆனால், ஏன் நம் உடலை அசைக்க இயலவில்லை? ஆராய்ச்சியாளர்களின் கூற்றுபடி, இந்த REMs அல்லாத நிலை… மூன்று அல்லது நான்கு நிலைகளை கொண்டுள்ளது. இதனை ‘விரைவான கண் இயக்கங்கள்’ என்றும் அழைப்பர்.

அதாவது, நாம் காணும் கனவானது நிஜத்தை போல் பிரதிபலிக்க… நிஜத்தில் எழுந்து பார்த்தால் அது கனவு தான்… என்பதனை நாம் உணரும் ஓர் நிலையாகும்.

REM ஆண்டோனியா

தூக்கத்தின் REM கட்டத்தின் போது, மூளை மிகவும் தீவிரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், நிறைய பேர்…இந்த நிலையில், நம் உடல் இயங்குவது இல்லை என நம்புகிறார்கள்.

தன்னை சுற்றி யாரோ இருப்பது போன்றதோர் உணர்வினை கொள்வது:

நிறைய பேருக்கு, தான் தனிமையில் தூங்கும்பொழுது கூட தன்னுடன் யாரோ இருப்பது போன்ற உணர்வினை கொள்வார்கள். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுபடி…யாராவது ஒருவர் கவலையாகவோ, அல்லது மன அழுத்தத்துடனோ இருக்கும்பொழுது இத்தகைய நிலையை அடைவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்லீப் பாராலைஸிஸ் என்பதின் வகைகள் ஒரு பார்வை:

ஆராய்ச்சிகளின் படி, மூன்று வகையான பிரம்மைகள் மக்களுக்கு ஏற்படுகிறதாம். அந்த நிலையை.

  1. ‘இன்குபஸ்’ (தூங்குபவரை படுக்கையோடு அழுத்தும் கொடிய ஆவி),
  2. இன்ட்ரூடர்’ (அத்துமீறி நுழைபவர்)
  3. அன்யூசுவல் பாடிலி எக்ஸ்பீரியன்ஸ் (அசாதாரண உடல் அனுபவங்களை கொள்வோர்)

என்னும் மூன்று நிலைகளாக பிரிக்கின்றனர்.

இன்குபஸ் வகை:

இந்த நிலையில், ஒருவர் தனது மார்பின் தீவிர அழுத்தத்தை உணர்வார். மேலும் அவர் சுவாசிக்கும் பொழுது கடினத்தன்மையையும் உணர்வார். இதற்கு முக்கிய காரணமாக ‘பயம் கொள்வது’ இருக்கிறது.

இன்ட்ரூடர் வகை:

இந்த நிலையின் போது…யாரோ தன்னோடு இருப்பது போன்ற நிலையை உணர்வார், மேலும் பயமும் ஏற்படுவதோடு, அவர்களை கண் கூட காண்பார், அத்துடன் அவர்களுக்கு குரல் பிரம்மைகளும் ஒலிக்க தொடங்கும். இந்த நிலையில் ஒரு சிறிய சத்தம் கேட்டால் கூட…அது, அவர்களின் மனதில் பயத்தை பல மடங்கு அதிகரிக்க செய்யும்.

அசாதாரண உடல் அனுபவங்கள் பெறும் ஒரு வகை:

இந்த நிலையில், ஒருவர் மிதப்பதை போன்றும் அறையை சுற்றி பறப்பதை போன்றும் உணர்ச்சிகளை கொள்வார். அந்த நேரத்தில் மூளை முழு செயல்பாட்டுடன் இருக்க…அவரோ அரைத்தூக்க நிலையில் இருப்பார்.