பெரியார் சிலை இடிக்கப்படும் என நான் கூறவே இல்லை – ஹெச்.ராஜா

தமிழகத்தில் பெரியார் சிலைகள் இடிக்கப்படும் என்று நான் பதிவிட்டது என்னுடைய கருத்தில்லை என ஹெச்.ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் கூட்டணியின் மூலம் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலை உடைக்கப்பட்டது.

பாஜக கட்சியை சேர்ந்தவர்களின் இந்த செயலுக்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.

ஆனால் அந்த கட்சியின் தேசிய ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதை கண்டு கொதித்தெழுந்த தமிழக அரசியல் தலைவர்கள், ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று தன் முகநூலில், லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் ஈ.வே.ரா. அவர்களின் சிலைகள் உடைக்கப்படும் என அனுமதி இல்லாமல் என் அட்மின் பதிவிட்டார், எனவே நான் அதை நீக்கம் செய்திருந்தேன்.

எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை, எனவே யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதயப் பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதியான முறையில் இந்து உணர்வாளர்களை இனைத்து குத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என பதிவிட்டுள்ளார்.