பிரபல ரிவியிலிருந்து விலகிய தேவதர்ஷினி…..

காஞ்சனா படத்தில் கோவை சரளாவுடன் சேர்ந்து காமெடியில் அசத்தியவர் தான் நடிகை தேவதர்ஷினி. இவர் கடந்த 2004ல் இருந்து படங்களில் நடித்து வருகிறார்.

பல படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்திய இவருக்கு தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்துள்ளதால் பிரபல ரிவியில் ‘சண்டே கலாட்டா’ என்னும் நிகழ்ச்சியில் காமெடி சகோ செய்து வந்தார்.

கடந்த 6 வருடமாக இதே ஷோவை ஒரே மாதிரி செய்து வருவதால் தற்போது மக்களுக்கு போர் அடித்துள்ளது. இதனால் பிரபல ரிவி நிர்வாகம் இந்த ஷோவிற்கு பதில் வித்யாசமாக ஏதாவது செய்வதற்கு கூறியுள்ளனர்.

ஆனால், தேவதர்ஷினி இனிமேல் இந்த சேனலில் எந்த ஷோவையும் செய்ய போவதில்லை என விலகியுள்ளார். இதனால் ஞாயிற்றுக்கிழமை சண்டே ஸ்பெஷல் ஷோவில் தேவதர்ஷினியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வேறு ஒரு சேனலில் இணைந்து வித்தியாசமான ஷோவை தேவதர்ஷினி செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.