யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பழைய மீன் சந்தை கட்டடத்தின் கழிப்பறையில் இருந்து சிசுவின் சடலம் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களினால் சிசுவின் சடலத்தை குறித்த பகுதியில் கொண்டு வந்து போட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சிசுவின் உடல் மிகவும் மோசமாக உருகுலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலசலகூடத்திற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து நகரசபை ஊழியர்கள் அதனை திறந்து பார்த்த போது இறந்த நிலையில் சிசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கழிப்பறையானது பாவனையில் இல்லாத நிலையில் மூடி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், சிசுவின் சடலம் எவ்வாறு கழிப்பறைக்குள் கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.