கொழும்பில் இன்று காலை மீட்கப்பட்ட மனித தலை தொடர்பிலான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு, கொஸ்வத்தை பண்டாரநாயக்க மாவத்தையில் இன்று காலை மனித தலை ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பான தகவல் வெளியாகி இருந்தது.
குறித்த மனிதத் தலை, முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த ஷாந்த குமார எனப்படும் “கொஸ் மல்லி” என்பவருடையதென பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மனித கொலைக்கு “கொஸ் மல்லி” தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்ற விசாரணை பிரிவினால் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.