தொடர்ந்தும் கண்டியில் அசாதாரண நிலை! கடைகளுக்கு தீ வைப்பு..

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கண்டி – அக்குரனை மற்றும் கடுகஸ்தோட்டை பகுதியில் தொடர்ந்தும் வன்முறை தலைதூக்கியுள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, காலவரையறையற்ற வகையில் கண்டியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.