ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி – திகன, தெல்தெனிய மற்றும் அக்குரனை பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஆயுதப்படைகளின் தலைவர்களுடனும், மதத் தலைவர்களுடனும் ஜனாதிபதி பல கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து காலவரையறையற்ற வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், கண்டியில் தொடர்ந்தும் அசாதாரண நிலை நீடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.