பப்பாளிப்பழம் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்காதுதான். ஆனால் சிலர் ஆரோக்கிய நன்மைகள் கருதி சாப்பிட ஆரம்பிப்பார்கள். சிலர் பப்பாளியைப் பார்த்தாலே எரிச்சலடைய ஆரம்பித்துவிடுவார்கள்.
இதற்குக் காரணம் நமக்கு அது பிடிக்காது என்பதைவிட, வேறுவேறு இடங்களில் இருந்து விலையுயர்ந்த பழங்கள் கிடைக்க ஆரம்பித்ததும் கௌரவத்திற்காக நாம் அதை சாப்பிடப் பழகிவிட்டோம். அதனால் விலை மலிவான, அதேசமயம் ஆரோக்கியம் நிறைந்த நம்முடைய நாட்டுப் பழங்களை சீ… என ஒதுக்கிவிடுகிறோம்.
பப்பாளி மரம் வளர நிறைய தண்ணீர் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எந்த மாதிரியான வறட்சியான இடத்திலும்கூட பப்பாளியை மிக எளிதாக விளைவிக்க முடியும்.அதற்கு செயற்கையான கெமிக்கல் கலந்தோ உரங்களோ அல்லது அதிக தண்ணீரோ தேவையில்லை. அதனால் பூச்சிக்கொல்லிகள் பயமின்றி பப்பாளியை சாப்பிடலாம்.
ஒருவழியாக நாம் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக்கொண்டு பப்பாளியை சாப்பிட்டாலும் முதலில் அதன் விதைகளை வழித்துத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதைவிட அதன் விதைகளில் தான் சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. நாம் ஏன் கட்டாயம் பப்பாளி விதையைச் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?…
சிறுநீரகக்கற்கள் கரையும்
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பைத் தடுக்கவும் பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கிறது என்று கராச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமட்டுமின்றி, சிறுநீரக நச்சுக்கள் தொடர்பான நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக பப்பாளி விதை அமைகிறது.
புற்றுநோயைத் தடுக்கும்
பப்பாளி விதையில் உள்ள மூலப்பொருள்கள் புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகள் வளர்ச்சியடையாமல் தடுக்கும். இதிலுள்ள வேதிப்பொருள் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சருமப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் தன்மை கொண்டது.
ஆண்மையை அதிகரிக்கும்
ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மை நீக்கும் ஆற்றல் பப்பாளி விதைக்கு உண்டு. இதில் அதிக அளவு புரோட்டீன் அடங்கியிருக்கிறது. பப்பாளி விதை ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. மூன்று வாரம் தொடர்ந்து பப்பாளி விதையை கீழ்வருமாறு சாப்பிட்டு வந்தாலே போதும். உங்கள் உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள்.
எப்படி சாப்பிடுவது
பொதுவாக பப்பாளி விதை சிறிது கசப்பாகவும் சிறிது காரத்தன்மையுடனும் இருக்கும். அதனால் தான் மிளகுடன் பப்பாளி விதை கலப்படம் செய்கிறார்கள். பப்பாளி விதையை சாப்பிடுவதற்கு சில முறைகளை கையாளுங்கள். சாப்பிடுவதும் எளிதாகும். பலன்களும் முழுமையாகக் கிடைக்கும்.
பப்பாளி விதை சாப்பிட ஆரம்பித்த முதல் இரண்டு நாட்கள் சிறிய சைஸ் பப்பாளியை எடுத்துக்கொண்டு, அதன் சில விதைகளை மட்டும் எடுத்து அப்படியே சாப்பிட ஆரம்பியுங்கள். சிறிய சைஸ் பப்பாளியை எடுத்துக் கொண்டால், நன்கு முற்றாமல் இளம் விதைகளாக இருக்கும். கசப்புத்தன்மையும் குறைவாக இருக்கும்.
இரண்டு நாட்கள் சாப்பிட ஆரம்பித்ததும் உங்களுக்குப் பழகிவிடும். அதன்பின் விதையை எடுத்து நன்கு அரைத்து கால் ஸ்பூன் அளவுக்கு சாப்பிட ஆரம்பியுங்கள். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்துங்கள். இரண்டாவது வாரம் அரை ஸ்பூன் அளவுக்கும் மூன்றாவது வாரத்திலிருந்து ஒரு ஸ்பூன் அளவுக்கும் சாப்பிட வேண்டும்.
நீங்கள் மிளகை எந்தெந்த உணவில் பயன்படுத்துகிறீர்களுா அதில் மிளகுக்கு பதிலாக இந்த பப்பாளி விதைகளை நசுக்கிப் பயன்படுத்தலாம். மிளகின் அதே சுவையை இந்த விதைகளும் உங்களுக்குக் கொடுக்கும். சாலட், சூப், இறைச்சி ஆகியவற்றுடன் இந்த விதைகளை அரைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் ஸ்மூத்தி போன்ற இனிப்பான பதார்த்தங்களோடு சேர்க்காதீர்கள். அது கொஞ்சம் கசப்புத்தன்மையைக் கொடுக்கும்.