இன்றைய ராசிபலன் (08/03/2018)

  • மேஷம்

    மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்து போகும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: தவறு செய்தவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.