நேற்றைய வன்முறைகளில் பலர் பலி?

கண்டி மாவட்டத்தில் பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு பேர் அந்தக் குண்டு வெடித்து பலியாகினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள, அம்பத்தென்ன, வேலகட பள்ளிவாசல் மீது நேற்று பிற்பகல் வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.

இதன்போது, கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது, அது வெடித்ததில், வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இருவர் பலியாகினர். மேலும் மூவர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் மாத்திரமே உயிரிழந்தார் என்று பொலிஸ் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தில் பௌத்த பிக்குகளும் காயமடைந்தனர் என்று செய்திகள் பரவிய போதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதனை நிராகரித்துள்ளார்.