வடக்கின் பெரும்போர்: மாணவர்களிடையில் முறுகல்….

வடக்கின் பெரும்போர் எனப்படுகின்ற துடுப்பாட்ட போட்டியில் போட்டியிடும் இரு பாடசாலைகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த துடுப்பாட்ட போட்டி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள், பொத்துவில் கல்லூரி ஆசிரியரை தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இரு கல்லூரிக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையை தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில் குறித்த ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.