இலங்கையில் ஏற்பட்டுள்ள இன வன்முறையை கையாளும் விடயத்தில் ஆளும் மைத்திரி-ரணில்அரசாங்கம் திறமையாக செயற்படுமா? என்று டைம்ஸ் ஒப் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில்,
நல்லாட்சிக்கான உறுதிமொழியுடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, மூன்றுஆண்டுகள் கடந்துள்ளன.
இந்த நிலையில், நடைபெற்று முடிந்த தேர்தலில், கடந்த மூன்று வருடக்காலப்பகுதியில்மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அரசாங்கம் பின்னடைவைச் சந்தித்தது.
எனினும், சிங்கள மக்களின் ஆதரவுடன், மஹிந்த ராஜபக்ச அணி உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி பெற்றது.
இவ்வாறான நிலையில், பௌத்த மக்களின் எதிர்ப்புகளை சமாளித்து தமக்கு வாக்களித்ததமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை மைத்திரி-ரணில் அரசாங்கம்நிறைவேற்றுமா? என்பது கேள்வியாக உள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.