கண்டி மாவட்டத்தை தவிர ஏனைய பிரதேசங்கள் வன்முறைகள் இன்றி மிகவும் அமைதியாக உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே அமைதி நிலையை குழப்பும் வகையில் சிலரால் போலி தகவல் வெளியிடப்படுவதாவும், அதனை நம்ப வேண்டாம் எனவும் பிரதமர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் கண்டி, கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் பல வர்த்தக நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. அம்பதன்ன பிரதேசத்தில் வன்முறையாளர்களிடமிருந்த கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதம் தொடர்பான கட்சி ஒன்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கட்டுக்கதைகள் பரவி வருகின்றன. அவ்வாறான ஒன்றும் ஏற்படவில்லை என்பதனை நான் உறுதியாக சொல்கிறேன்.
பொலிஸ் மற்றும் இராணுவ படைகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அவசர நிலைமையிலும், அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கண்டியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலும், பொது மக்களை அமைதியாக செயற்படுமாறு கேட்டு கொள்கின்றேன்.
நாட்டின் ஏனைய பிரதேசங்கள் அமைதியாக உள்ள நிலையில் போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம். சிங்களம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை சமாதானமான முறையில் நடந்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுகொள்கின்றோம் என பிரதமர் விசேட அறிவிப்பு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
We are taking action to enforce law & order to ensure security across the Kandy district. The armed forces, STF & police have been deployed & instructed to be prepared to control any kind of tension. I appeal to the public to act peacefully to safeguard law & order in your areas.
— Ranil Wickremesinghe (@RW_UNP) March 7, 2018