இந்து சமயப் பெண்கள் திருமணமான பிறகு, தங்கள் கால் விரல்களில் வளையம் போன்ற அணிகலனை அணிந்து கொள்கின்றனர்.
இதனை மெட்டி என்று அழைக்கின்றனர். பழங்காலத்தில் ஆணுக்குரிய அணிகலனாக இருந்த மெட்டி, காலப் போக்கில் பெண்களின் அணிகலனாக மாறியது.
ஆண் தனக்கு திருமணமானதை வெளிப்படுத்தும் விதமாக, தங்கள் கால்களில் மெட்டி அணிந்தனர். இதனைப் பிற பெண்கள் கண்டு, உணர்ந்து கொள்வர். ஆனால் காலப் போக்கில் பெண்களின் கால்களுக்கு மாறிப் போனது. பெண்கள் கால் கட்டை விரலுக்கு, அடுத்த விரலில் மெட்டி அணிவர். அந்த விரலில் தான், கருப்பையில் நரம்பு நுனிகள் வந்து சேருகின்றன.
எனவே மெட்டி அணிவதால், கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. மேலும் கருப்பைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பெண்கள் கர்ப்ப காலத்தில் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை போன்றவை ஏற்படுகின்றன. அப்போது கால் விரல் நரம்பினை அழுத்தித் தேய்த்தால் வலிகள் குறைந்துவிடும்.