மஹாசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் ஞானசார தேரரே நாட்டில் இடம்பெற்றுவரும் கலவரத்திற்கு முக்கிய பின்னணி என தகவல் வெளியாகியுள்ளது.
அமித் வீரசிங்க, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைச் சந்தித்து கலந்துரையாடிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தக் காணொளியில் ‘பொலிஸார் அங்கு நிற்பதால் தாக்குதலை தற்பொழுது நிறுத்துவோம். நாளை மறுதினம் மீண்டும் சேர்ந்து கண்டியில் எங்கையாவது திருப்பி அடிப்போம்.
நீங்கள் சிறைக்குப் போனால் காப்பாற்ற யாரும் இல்லை. நான் அழுது மன்றாடியே வர்த்தகரிடம் 400 உணவுப் பார்சல்களை பெற்றுள்ளோம்.
ஒருதரை பிணையில் எடுக்க ஒருவர் கையெழுத்திட வேண்டும். இதுவே முஸ்லிம் பிரதேசம் என்றால் கையெழுத்திட யாரும் இல்லை. எங்களிடம் காசும் இல்லை’ என்றும் அமித் வீரசிங்க இந்த கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் கண்டி தெல்தெனியவில் இடம்பெற்ற கலவரத்தின் போது முஸ்லிம் இளைஞன் ஒருவன் வீட்டிற்குள் சிக்கி உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.