தமிழகத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மகனை கிணற்றில் தள்ளி விட்டு கொன்றதாக தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30), இவரது மனைவி மைனாவதி(24).
இவர்களுக்கு சசிகுமார் (7), அகிலன் (5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5ம் திகதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சசிகுமார் காணாமல் போய்விட்டதாக மைனாவதி பொலிசிடம் புகார் அளித்தார்.
இதனைதொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில், மைனாவதி மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் உண்மையை ஒப்புக்கொண்டவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற பிள்ளையை கிணற்றில் தள்ளிவிட்டு கொன்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (28) என்பவருக்கும், எனக்கும் ஆறு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.
நான் அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினேன். அதற்கு அவர், கணவரிடம் விவாகரத்து பெற்று, குழந்தைகளை கொன்று விட்டு வந்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.
இளைய மகன் அகிலன், என் தாயிடம் வளர்கிறான், ஆனால் மூத்த மகன் சசிகுமார் மட்டும் எங்களுடன் இருக்கிறான்.
அவனை 5-ம் திகதி காலையில் கிணற்றில் தள்ளி கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் பொலிஸார்கள் தீயணைப்பு வீரர்கள் மூலம் சசிகுமாரின் சடலத்தை மீட்டு, தலைமறைவான தேவராஜை தேடி வருகின்றனர்.