வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் போனிகபூர்?

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பி வரும் நிலையில், போனிகபூர் ஆவணப் படம் ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகையான ஸ்ரீதேவி கடந்த 1997-ஆம் ஆண்டு படத்தயாரிப்பாளரான போனிகபூரை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின் தன்னுடைய பிள்ளைகளுக்காக சினிமா உலகை விட்டு சற்று விலகியிருந்தார் ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து போனி கபூர் எடுத்த சில திரைப்படங்கள் தோல்வியில் முடிந்ததால், மீண்டும் அவர் வெள்ளித் திரையில் தோன்றினார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி துபாயில் மரணமடைந்தார். அவர் மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் இன்றளவும் வந்து கொண்டே தான் இருக்கிறது.

இதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஸ்ரீதேவி தொடர்பான ஆவணப்படம் ஒன்றை தயாரிப்பதற்கு போனி கபூர் முடிவு செய்துள்ளதாகவும், இதை அவரது நண்பரும், இயக்குனருமான Shekhar Kapoor இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் ஸ்ரீதேவி வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள், யாரும் அறிந்திராத சில விடயங்கள் மற்றும் அவரது மரணம் குறித்து வதந்திகள் கிளம்பி வருவதால் போனி கபூர் மிகுந்த வருத்ததில் இருப்பதாகவும், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆவணப் படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.