அனைவரையும் அச்சுறுத்தி வரும் நோய்களுள் புற்றுநோயும் ஒன்று. இந்த புற்றுநோய் ஒருவரை தாக்க ஒருசில குறிப்பிட்ட காரணங்களை மட்டும் சொல்ல முடியாது.
அடிப்படைக் காரணமான உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணு மாற்றம் ஆகியவற்றை தவிர்த்து பலவித உடல் கூறு பிரச்சனைகளினாலும் புற்றுநோய் உண்டாகிறது என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.
புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்?
- நாம் சாப்பிடும் உணவில் விட்டமின் குறைவுகள் ஏற்படும்.
- நல்ல சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதுடன் உப்பு மற்றும் மசாலா உனவு அதிகப்படியாக உட்கொள்வது,
- நவீன உணவுகளான பீட்சா, பரோட்டா, பர்கர், போன்ற மைதாவை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது,
- அதிக மன அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட வாழ்க்கை முறை பிரச்சனைகள்,
- உடலில் நோயெதிர்ப்பு சக்தி இல்லாமல் மிகவும் பலவீனமாக இருப்பது,
- புகையிலை, மது போன்ற போதை பழக்கத்திற்கு உட்படுதல், பென்சீன், சோடா மற்றும் எண்ணெய் பொருட்களை சாப்பிடுவது,
- மரபணு மாற்றாங்களினால் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாக வரலாம்.
- நாள்பட்ட அழற்சி நோய்கள் போன்ற சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
புற்றுநோயின் ஆரம்பக்கால அறிகுறிகள்?
- உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாக தொடங்கும்.
- நீண்ட நாட்கள் புண் கட்டிகள் ஆறாமல் இருக்கும்.
- நாக்கு, ஈறு மற்றும் வாய் பகுதிகளில் தடிப்பு ஏற்படுவதுடன், சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் மாறும்.
- குரலில் திடீர் மாற்றம் ஏற்படும்.
- தொடர்ச்சியான இருமல் உண்டாகும்.
- குரலில் கரகரப்பு மற்றும் இருமல் ஏற்படும் போது ரத்தம் வரும்.
- மூச்சடைப்பு, வீசிங் பிரச்சனைகள் ஏற்படும்.
- உணவு அல்லது நீர் விழுங்கும் போது சிரமம் ஏற்படும்.
- நாக்கை அசைப்பதில் சிரமம் ஏற்படும்.
- காரணமே இல்லாமல் உடலின் எடை குறையும்.
- கண்கள், தொண்டை, கழுத்து, வாய் ஆகிய பகுதிகளில் வீக்கம் மற்றும் காதில் வலி ஏற்படும்.