7 வயதான சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறுமியின் தாத்தா ஆகியோரை மீட்டியாகொட பொலிஸார் கைது செய்துள்னளர்.
கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு பலப்பிட்டி நீதவான் சம்பத் கமகே உத்தரவிட்டுள்ளார்.
கொடகம தெல்வத்த என்னும் முகவரியில் வதியும் 36 வயதான சிறுமியின் தந்தையும், 67 வயதான சிறுமியின் தாத்தாவுமே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி தொடர்பில் மருத்துவ அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிறுமி பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய், மீடியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் பொலிஸார் சிறுமியின் தந்தையையும், தாத்தாவையும் கைது செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னதாக கணவருடன் முறுகலை ஏற்படுத்திக் கொண்டு தான் தாய் வீட்டு சென்றதாகவும் அங்கு வைத்து மகள் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியதாகவும் குறித்த பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது பிள்ளையின் மகப்பேற்றுக்காக தாம், 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மூத்த மகள் இவ்வாறு கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மீடியாகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.