முஸ்லிம் இராஜதந்திரிகளுடன் மகிந்த அவசர சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளுடன் அவசர சந்திப்புகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இந்த அவசர சந்திப்புகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறையின் பின்னணியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், இதற்கு மகிந்த தரப்பினர் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்து பேசியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.