யாழில் மூடப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள்!

யாழில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அங்கு நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.