யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆவா குழுவினர் அங்கிருந்த கடையை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் கொக்குவில் பகுதில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குவில் பகுதில் உள்ள ஹாட்வெயார் கடை ஒன்றுக்குள் நுழைந்த ஆவா குழு உறுப்பினர்கள் கடையில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
10 மோட்டார் சைக்கிளில் வந்த 12 பேரே இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் தப்பிச் செல்லும் போது அவர்களை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.
இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.